இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான ஓர் நாள் இன்று! கரு ஜயசூரிய கூறியுள்ள விடயம்

Report Print Kamel Kamel in அரசியல்
443Shares

சர்வாதிகார ஆட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக் கூடாது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான ஓர் நாள் இன்று எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மனச்சாட்சிக்கு இணங்கிச் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

1933ஆம் ஆண்டு ஜேர்மனிய நாடாளுமன்றம் கைகளை தூக்கி சர்வாதிகாரத்தை அங்கீகரித்தது எனவும், அவ்வாறான ஓர் தவறை எமது நாடாளுமன்றம் செய்து விடக் கூடாது எனவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று 20ஆம் திருத்தச் சட்டத்திற்கு எவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கின்றார்கள் என்பதனை எதிர்வரும் காலங்களில் வரலாறு மதிப்பீடு செய்து கொள்ளும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.