மூன்றில் இரண்டு பெரும்பான்மை மிக இலகுவாக கிடைக்கும் - திடமான நம்பிக்கையில் பசில்

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட உள்ள 20வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் உள்ளது என்ற திடமான நம்பிக்கையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இருப்பதாக தெரியவருகிறது.

பசில் ராஜபக்சவே இதற்காக திரைமறைவில் இருந்து காய்களை நகர்த்தி வருகிறார்.

நாடாளுமன்றத்திற்கு அருகில் வசித்து வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஒருவரது வீட்டில் பசில் ராஜபக்ச நேற்றைய தினம் சுமார் இரண்டு மணி நேரம் எவ்வித பரபரப்பும் இன்றி தங்கி இருந்துள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் இன்று மாலை மிக இலகுவாக பெற்றுக்கொள்ள உள்ளதாக பசில் ராஜபக்ச இதன் போது தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.