20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க உள்ள ஐ.மக்கள் சக்தியின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் - வெளியான பெயர் விபரம்

Report Print Steephen Steephen in அரசியல்
888Shares

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றவுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஆளும் கட்சியுடன் இணைந்துக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அலி சப்றி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் நசீர், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் ஹாரிஸ் போன்றோர் இவ்வாறு இணைந்து கொள்ளவுள்ளனர்.

மேலும், பைசல் காசிம், மொஹமட் முஷாரப் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஆகியோரே 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து வாக்களிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.