அரசாங்கத்தின் 20ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தில் உள்ள இரட்டைப் குடியுரிமை பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தி இன்று அமெரிக்க தேசியக் கொடியை உயர்த்தி சபையில் இன்று எதிர்ப்பினை வெளியிட்டது.
20ஆவது ஆவது அரசியல் யாப்பு திருத்தம் மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் இடம்பெற்றபோது, உரையாற்றிய எதிர்க்கட்சித் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அமெரிக்காவின் தேசியக் கொடியை உயர்த்தி எதிர்ப்பினை வெளியிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் பெரும் கூச்சலிட்டு எதிர்ப்பினை வெளியிட்டதோடு, ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்திற்குள் கொண்வரக்கூடிய பொருட்கள் தொடர்பில் சில மட்டுப்பாடுகள் காணப்படுவதாக குறிப்பிட்டார்.
இந்த கூச்சலையும் பொருட்படுத்தாமல் நளின் பண்டார, அமெரிக்கத் தேசியக் கொடியையும், கறுப்பு நிறத்திலான முகமூடி ஒன்றையும் அணிந்துகொண்டு சபையில் உரையாற்றினார்.
குறிப்பாக அமெரிக்கப் பிரஜைகள் மற்றும் சீனப்பிரஜைகளும் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரவேசிப்பதற்கான வாய்ப்புக்களை அரசாங்கம் செய்துகொடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.