மாகந்துரே மதுஷின் சகாக்கள் ஆளும் கட்சியிலேயே இருக்கின்றனர்: ரஞ்சித் மத்துமபண்டார

Report Print Steephen Steephen in அரசியல்
148Shares

மாகந்துரே மதுஷின் சகாக்கள் உட்பட போதைப் பொருள் பாவனையாளர்கள், விற்பனையாளர்கள், அவரது நண்பர்கள் என அனைவரும் ஆளும் கட்சியிலேயே இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கைப்பற்றிய ஹெரோயின் உட்பட போதைப் பொருள் தொகை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தேர்தல் வன்முறைகள், உட்பட அனைத்து வன்முறைகளும் குறைந்து காணப்பட்டதாகவும் 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் தேர்தல் வன்முறைகள் உட்பட அனைத்து வன்முறைகளும் மீண்டும் தலைத்தூக்கும் எனவும் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.