அனைத்து இன மக்களும் சமமாக வாழக்கூடிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும்: நீதி அமைச்சர்

Report Print Kamel Kamel in அரசியல்
101Shares

அனைத்து இன மக்களும் சமமாக வாழக்கூடிய ஓர் புதிய அரசியல் அமைப்பு ஒரு ஆண்டிற்குள் உருவாக்கப்படும் என நீதி அமைச்சர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

20ம் திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்று தேவைப்படுகின்றது என்பதனை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த 20ம் திருத்தச் சட்டம் தற்காலிகமானது என்பதனை நான் இங்க பதிவு செய்கின்றேன்.

சிரேஸ்ட சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையில் ஏற்கனவே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மலையக தமிழ் மக்களை பிரதிநித்துவம் செய்யக் கூடிய பிரதிநிதி ஒருவர் உள்ளடங்களாக 9 பேரைக் கொண்ட புத்திஜீவிகளைக் கொண்டு ஓர் குழுவொன்று புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதிய அரசியல் அமைப்பு ஒன்றை ஓராண்டு காலப்பகுதியில் உருவாக்கப்படும் என உறுதிமொழி வழங்கியுள்ளார்.

நாட்டின் அனைத்து மக்களையும் சமமாக மதிக்கப்படக்கூடிய இலங்கையை கட்டியெழுப்பும் ஓர் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும்.

பௌத்த மதத்திற்கு உரிய முக்கியத்துவம் வழங்கும் அதேவேளை ஏனைய அனைத்து இன மத சமூகங்களுக்கும் சம அந்தஸ்தும் அனைவரும் ஒன்றாக வழங்கக்கூடியதுமான ஓர் அரசியல் அமைப்பு உருவாக்கப்படும்.

நாட்டின் அனைத்து இன மக்களும் ஒன்றாக ஐக்கியமாக வாழக்கூடிய வகையில் இந்த அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரீ தெரிவித்துள்ளார்.