ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக உரையாற்றியுள்ளார்.
20ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் சற்று முன்னர் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் பேசுவதற்கு அனுமதி வழங்குமாறு விடுத்த கோரிக்கையை முன்வைத்த போதிலும் தமக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபை தேர்தல்களை கூட கடந்த அரசாங்கத்தினால் நடாத்த முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கடந்த அரசாங்கத்தை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளினால் பல்வேறு சேவைகள் இந்த நாட்டுக்கு சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த உரையின் போது எதிர்க்கட்சியினர் பணத்திற்காக கட்சி தாவியதாக கூச்சலிட்டு எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.