எதிர்வரும் ஓராண்டு காலப் பகுதியில் புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் மனதுகளில் என்றுமே ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸ இருக்கின்றார் என அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் நிச்சயமாக ஓராண்டு காலப் பகுதியில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை நிறைவேற்றுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையில் தாம் 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக தெரிவித்துள்ளார்.