20ம் திருத்தச் சட்டம் குறித்த வாக்கெடுப்பில் மைத்திரி பங்கேற்கவில்லை

Report Print Kamel Kamel in அரசியல்
151Shares

20ம் திருத்தச் சட்டம் குறித்த வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை.

20ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதங்களின் பின்னர் இன்றைய தினம் வாக்கெடுப்பிற்கு விடுக்கப்பட்டது.

எவ்வாறெனினும், இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை.

20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக ஜக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் உட்பட 8 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களும் ஆதரவாக வாக்களித்தார்கள்.

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் இன்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.