புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீடிக்கும் என நம்புகின்றேன்: மஹிந்த ராஜபக்ஸ

Report Print Kamel Kamel in அரசியல்
415Shares

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை, பிரித்தானியா நீடிக்கும் என நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் டுவிட் பதிவு ஒன்றை இட்டதன் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்து கொடூரமான பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள் உலகின் பல நாடுகளில் தொடர்ந்தும் வீரியத்துடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்பாடானது எந்தவொரு நாட்டினதும் தேசியப் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாகும் எனவும் பிரித்தானியா புலிகள் மீதான தடையை தொடர்ந்தும் நீடிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

01.பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியானது

02. பிரித்தானியாவில் விடுதலைப்புலிகளின் தடைநீக்கம்! சிரேஷ்ட சட்டத்தரணி வெளியிடும் தகவல்கள்

You may like this video