பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் தொடர்பிலான தீர்ப்பு குறித்து - அரசாங்கம் கூறிய தகவல்

Report Print Kamel Kamel in அரசியல்

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான தீர்ப்பு குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் குறித்த மேன்முறையீட்டு ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

புலிகளுக்கு எதிரான அடையை நீக்குவதாக இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பு குறித்து இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் இலங்கை எவ்வித பங்குதாரராகவும் இருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இந்த தடை நீக்கத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலி செயற்பாட்டாளர்கள் வெளிநாடுகளில் தொடர்ச்சியாக பயங்கரவாத கொள்கைகளை முன்னெடுப்பதனை நிரூபிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திடம் போதுமானளவு ஆதாரங்கள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டுக்கும் பிராந்தியத்திற்கும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து இலங்கை விழிப்புடன் அவதானித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது..

You may like this video