பொதுஜன பெரமுனவின் 20வது திருத்தத்துக்கு ஆதரவாக இன்று நாடாளுமன்றில் வாக்களித்த தமது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதேவேளை 20வது சட்டமூலத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் பெற்றுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்ரேஸின் சில உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.
இதில் ஆதரவாக வாக்களித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கமான மலையக மக்கள் முன்னணியின் ஏ.அரவிந்தகுமாருக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கைக்காக கட்சியின் மத்திய குழு நாளை காலை கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.