அமைச்சர் அலி சப்றி முகநூல் பதிவு - அரசியல் அவதானிகளின் கருத்து

Report Print Steephen Steephen in அரசியல்

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்திருந்த, நீதியமைச்சர் மொஹமட் அலி சப்றி, அந்த திருத்தச் சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு சில மணி நேரத்திற்கு பின்னர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.

“ வேலை செய்து காட்டு,இல்லை அழிந்து விடு! சாக்கு போக்குகள் தற்போது பொருந்தாது” என்ற அர்த்தத்தில் அந்த பதிவை இட்டிருந்தார்.

இது 20வது திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரத்தை பெற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விடுத்த எச்சரிக்கையா? அல்லது முழு அரசாங்கத்திற்கும் வழங்கிய எச்சரிக்கையா என்பது தெளிவாக புரியவில்லை என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் மொஹமட் அலி சப்றி ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்த அந்த பதிவின் மொழிப்பெயர்ப்பு.

“ தேசிய பாதுகாப்பு மற்றும் தனி நபர் பாதுகாப்பு, வேகமான பொருளாதார வளர்ச்சி, போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் ஒழிக்கப்பட்ட சமூகம், தேசிய ஒற்றுமை மற்றும் நட்புறவு, இவற்றை உறுதிப்படுத்துங்கள்!. இல்லை அழிந்து விடுங்கள்! சாக்கு போக்குகளுக்கு தற்போது காரணங்கள் இல்லை” என அலி சப்றி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அலி சப்றி தனது பதிவில் தனி நபர் பாதுகாப்பு குறித்து கூறியிருந்தாலும் தனி நபர் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது பற்றி எதுவும் கூறவில்லை.

சில நேரம் ஜனாதிபதிக்கு மாத்திரமல்ல, முழு சமூகத்திற்கும் கடும் எச்சரிக்கை விடுக்கும் தேவை அமைச்சர் அலி சப்றிக்கு இருந்திருக்கலாமோ என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.