அரவிந்தகுமார் தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து நீக்கம்! மனோ கணேசன் அறிவிப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அரவிந்தகுமாரை கூட்டணியிலிருந்து நீக்குவதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்தகுமார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பதவிகளிலிருந்து அதிகாரபூர்வமாக நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணி சில மணித்தியாலங்களில் கூடி ஆராய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரவிந்த குமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவரது கட்சியான மலையக மக்கள் முன்னணியிடமும் கோரப்பட உள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.