மைத்திரிக்கு முதுகெலும்பு இருந்தது - திஸ்ஸ அத்தநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையின் பலவீனமான மற்றும் தோல்வியான ஜனாதிபதியாக இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 20வது திருத்தச் சட்டத்திற்கு வாக்களிக்காமல் தவிர்க்க முதுகெலும்பு இருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரச்சினைகள் இருந்தாலும் அவர் தலையிட்டு நிறைவேற்றிய அந்த திருத்தச் சட்டத்திற்காக குரல் கொடுத்தமை வரவேற்கத்தக்கது.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள பாரதூரமான விடயத்தை கவனத்தில் கொண்டு, அதற்கு ஆதரவாக வாக்களித்தால், தனது அரசியல் மரணித்து போய்விடும் என்பதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்துக்கொண்டிருந்தார் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

You may like this video