20இற்கு ஆதரவளித்த சஜித் அணியினர் நாடாளுமன்றக் குழுவில் இருந்து நீக்கம்!

Report Print Rakesh in அரசியல்

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவிலிருந்து விலக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது என ஐக்கிய மக்கள் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கட்சியின் நேற்றைய கூட்டத்தில் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியின் நாடாளுமன்றக் குழுவிலிருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க கூடாது என கட்சியின் ஒருமித்த முடிவையும் மீறி அதற்கு ஆதரவாக வாக்களித்து சர்வாதிகார 20ஆவது திருத்தம் நிறைவேறுவதற்கு உதவிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக கட்சியின் நாடாளுமன்றக் குழுவிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.