சிறுபான்மை வாக்கு வங்கி இன்றி அடுத்த தேர்தலில் வெல்ல முடியாது:ஜகத் வெள்ளவத்த

Report Print Steephen Steephen in அரசியல்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கம் சிங்கள பெரும்பான்மை மக்களின் வாக்குகளை எதிர்பார்க்காது என்பதால், சிறுபான்மை வாக்கு வங்கியை சிக்கலாக்கி கொள்ள முடியாது என பேராசிரியர் ஜகத் வெள்ளவத்த தெரிவித்துள்ளார்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவரான அவர், அமைச்சுக்களின் ஊடக செயலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார்.

உண்மையான யதார்த்த நிலைமையை நினைவில் வைத்துக்கொண்டு ஊடகங்கள் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் ஜகத் வெள்ளவத்த, முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்சவின் மிக நெருங்கிய ஆதரவாளர் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.