600 மில்லியன் ரூபா பணத்திற்காக 20ம் திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்?

Report Print Kamel Kamel in அரசியல்

600 மில்லியன் ரூபா பணத்திற்காக, அரசாங்கத்தினால் அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 20ம் திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்களித்துள்ளார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு 600 மில்லியன் ரூபா பணம் பேரம் பேசப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இரண்டு அமைச்சர்களுடன் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பேரம் பேசியுள்ளார்.

வாக்களிப்பதற்கு முன்னதாக பணத்தை வழங்குமாறு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கோரிய போதிலும், வாக்களித்ததன் பின்னர் பணம் வழங்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், வாக்கெடுப்பின் போது 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதுவரையில் 600 மில்லியன் பணம் கிடைக்கப் பெறவில்லை என தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வாக்களித்தன் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ள கழிப்பறைக்கு வருமாறு அமைச்சர்கள் கூறியிருந்தனர் எனவும், பின்னர் அந்த இடத்தில் பணம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.