துமிந்தவை விடுதலை செய்யுமாறு கோரவில்லை – ஆளும் கட்சியினர்

Report Print Kamel Kamel in அரசியல்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு தாம் கோரிக்கை விடுக்கவில்லை என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மகஜர் ஒன்றின் மூலம் துமிந்தவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும், தாங்கள் இவ்வாறான ஓர் மகஜரில் கையொப்பமிடவில்லை என ஆளும் கட்சியின் கெஹலிய ரம்புக்வெல்ல, மஹிந்த அமரவீர, விதுர விக்ரமநாயக்க, விமல் வீரவன்ச மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலை சம்பவம் தொடர்பில் துமிந்த சில்வாவிற்கு கடந்த 2016ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.