கொரோனாவிற்காக சேகரிக்கப்பட்ட100 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது? எதிர்க்கட்சி கேள்வி

Report Print Ajith Ajith in அரசியல்

கொரோனாவுக்காக அரசாங்கத்தினால் சேகரிக்கப்பட்ட நிதி தொடர்பில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த நிதிக்கு எவ்வளவு சேகரிக்கப்பட்டது என்பதை நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் “இட்டுகம” என்ற பெயரில் இந்த நிதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கு ஜனாதிபதி நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த நிதிக்கும், இதற்கு பின்னர் சேகரிக்கப்பட்ட நிதிகளுக்கும் என்ன நடந்தது என்பதை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மயந்த திசாநாயக்க கோரியுள்ளார்.

இதேவேளை இரண்டாவது கொரோனா அலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். பிரன்டிக்ஸ் நிறுவனமே இரண்டாம் கொரோனா அலைக்கு காரணம் என்றால் அந்த நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அத்துடன் அந்த நிறுவனம் நட்ட ஈட்டை செலுத்த வேண்டும் என்றும் மயந்த தெரிவித்துள்ளார்.

You may like this video