நாடாளுமன்றம் செல்கின்றாரா பசில்..??

Report Print Ajith Ajith in அரசியல்

அரசியலமைப்பின் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தாம் நாடாளுமன்றத்துக்கு விரைவில் செல்லலாம் என்று கூறப்படுகின்றமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கருத்துக்கூற மறுத்துவிட்டார்.

20வது திருத்தத்தின் மூலம் பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு செல்லப்போகிறார் என்ற செய்தி ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இது தொடர்பில் தமது கருத்தை வெளியிட்ட பசில் ராஜபக்ச அதனை மறுத்துவிட்டதாக கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும் தாம் நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கவே 20வது திருத்தம் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டு 20வது திருத்தத்தின் முக்கியத்துவம் தூக்கியெறியப்படக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

19வது திருத்தத்தில் இருந்த இரட்டை குடியுரிமைப் பெற்றவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படக்கூடாது என்ற திருத்தம் 20 இல் மாற்றப்பட்டு அவர்களும் நாடாளுமன்றத்துக்கு வரலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்தநிலையில் இரட்டை குடியுரிமையை கொண்ட பசில் ராஜபக்ச, இதன்மூலம் நாடாளுமன்றத்துக்கு வருவார் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன.