நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

Report Print Mubarak in அரசியல்

கொவிட் - 19 இன் மூலம் பாதிப்புக்குள்ளான கிழக்கு மாகாண பகுதிகளுக்கு உரிய முறையில் நிவாரணத் திட்டங்களை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதியிடம் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவர் விடுத்துள்ள வேண்டுகோளில்,

நாட்டில் பல மாவட்டங்களில் இன்று பாதிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ள கம்பஹா போன்ற பகுதிகளுக்கு அரசாங்கம் தனது நிவாரண பணியினை மேற்கொள்வது போன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டத்தில் இத்தாக்கத்தின் காரணமாக முடக்கப்பட்டு அப்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கும் வகையில் அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் ஒவ்வொருவரும் இந்த விடயத்தில் மிக அவதானமாகவும் புத்திசாதுரியமாகவும் செயற்படுவதன் மூலமே தம்மையும் பாதுகாத்து, எம்மை சூழவுள்ள உறவினர்கள் மற்றும் அயலவர்களை இந்த கொடிய வைரஸ் பரவாமல் இருப்பதற்கு வழி செய்ய முடியும்.

கொரோனா வைரஸ் நமது ஒவ்வொருவரினதும் வீட்டு வாசல் கதவினை தட்டிக் கொண்டிருக்கிறது என்ற யதார்த்தத்தை உணர்ந்து செயற்படுமாறும் இந்த விடயத்தில் பொழுதுபோக்காக இருக்காமல் கொரோனா வைரஸின் தாக்கத்தை இல்லாமல் செய்ய உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு சுகாதார அதிகாரிகள் தமது பணியை முன்னெடுக்க உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த வைரஸின் பரவுகையானது மிக வேகமாக இருப்பதால் மக்கள் இருக்கமான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதுதடன் தேவையற்ற பயணங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது கோரிக்கையில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.