சீனா - இலங்கை உறவுகளில் அமெரிக்கா தேவையின்றி தலையீடு செய்கின்றது: சீனத்தூதரகம்

Report Print Kamel Kamel in அரசியல்

சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் அமெரிக்கா தேவையின்றி தலையீடு செய்து வருவதாக இலங்கைக்கான சீனத்தூதரகம் குற்றம் சுமத்தியுள்ளது.

சீனத்தூதரகத்தினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 22ம் திகதி அமெரிக்க ராஜதந்திரியான டீன் தொம்சன், சீன,இலங்கை உறவுகள் குறித்து விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

அமெரிக்க ராஜதந்திரி ராஜதந்திர வரை முறைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக சீனத்தூதரகம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை மற்றும் சீன மக்களுக்கு இடையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்று ரீதியான நற்புறவு காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற அறிவாற்றால் உண்டு எனவும், மூன்றாம் தரப்பு எதுவும் அறிவுரை சொல்லத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்கச் செயலாளரின் விஜயத்தின் ஊடாக சீன,இலங்கை விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ராஜாங்கச் செயலாளர் பொம்பியோவின் விஜயத்திற்கு முன் ஆயத்தமாக பெரும் எண்ணிக்கையிலான படையினரை இலங்கைக்கு ஏன் அனுப்பி வைக்க வேண்டுமெனவும் சீனத்தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது.