துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்க கோருகின்ற மனுவில் கையெழுத்திட மறுத்தார் ஜீவன்

Report Print Rakesh in அரசியல்

மரணதண்டனைக் கைதியான மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரிய மனுவில் ஆளும் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் கையெழுத்திட்டுள்ளனர்.

இதில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஆகியோர் இந்த மனுவில் கையெழுத்திட மறுத்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

எனினும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆதரவாகக் கையெழுத்திட்டுள்ளார்.

அத்துடன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், அரவிந்குமார், உதயகுமார் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆகியோரும் ஆதரவாகக் கையெழுத்திட்டுள்ளனர் எனவும் அறியமுடிந்தது.