பொம்பியோவின் விஜயத்திற்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்

Report Print Kamel Kamel in அரசியல்

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக்பொம்பியோவின் இலங்கை விஜயத்திற்கு எதிராக ஜே.வி.பி போராட்டமொன்றை நடத்தியுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மைக்பொம்பியோ இன்றைய தினம் மாலை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எம்.சீ.சீ உடன்படிக்கை, சேபா உடன்படிக்கை போன்றவற்றுக்கு எதிர்ப்பை வெளியிட்டு ஜே.வி.பி.யினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இலங்கையின் விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு செய்யக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொம்பியோ ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.