நெஞ்சு புடைக்க கத்துவதால் எவரும் தேசப்பற்றாளர்களாக ஆகிவிட மாட்டார்கள்! நீதியமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்
255Shares

நிலைப்பாடு ஒன்றை வெளியிடுவதன் மூலம் மாத்திரம் எவரும் அடிப்படைவாதியாக ஆகிவிட மாட்டார்கள் என நீதியமைச்சர் மொஹமட் அலி சப்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நெஞ்சை புடைத்து கொண்டு கத்துவதால் மாத்திரம் எவரும் தேசப்பற்றாளர்களாக இருக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

சிறுபான்மை என்பதால் மாத்திரம் நிலைப்பாடு போலியானது அல்ல. பெரும்பான்மை என்பதால் மட்டும் நிலைப்பாடு சரியாக இருக்காது.

நிலைப்பாடு ஒன்றை வெளியிடுவதால் எவரும் அடிப்படைவாதியல்ல. நெஞ்சு புடைக்க கத்துவதால் மாத்திரம் எவரும் தேசப்பற்றாளராக இருக்க மாட்டார் என நீதியமைச்சர் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தன் காரணமாக நீதியமைச்சர், தற்போது அரசாங்கத்திற்குள் இருக்கும் சிங்கள அடிப்படைவாதிகளின் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறார் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.