எமது கோரிக்கை நியாயமானது - 189 நாடுகளில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது! அலி சப்ரி..

Report Print Steephen Steephen in அரசியல்
213Shares

அயல் நாடான இந்தியா உட்பட உலகில் உள்ள 189 நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இறக்கும் நபர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கி இருப்பதாக நீதியமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு இதனை அங்கீகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் மக்களின் இந்த கோரிக்கையானது நாட்டின் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்துவது அல்ல. இது அவர்களின் நியாயமான கோரிக்கை.

முஸ்லிம் மக்களின் இந்த கோரிக்கையை அடிப்படையாக கொண்டு சிலர் அரசியல் லாபம் பெற முயற்சித்து வருகின்றனர். மேலும் சிலர் முஸ்லிம் மக்களை அடிப்படைவாதிகள் என முத்திரை குத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனவும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோயால் இறக்கும் நபர்களை அடக்கம் செய்யாமல் தகனம் செய்ய வேண்டும் என்ற சுற்றறிக்கையை முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க வெளியிட்டிருந்தார்.

இதனடிப்படையிலேயே கொரோனா காரணமாக இறக்கும் நபர்களின் இறுதி கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறக்கும் முஸ்லிம்களை தமது மத முறைப்படி அடக்கம் செய்ய இடமளிக்குமாறு முஸ்லிம் மத தலைவர்கள் அரசாங்கத்திடம் பல முறை கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கி இருப்பதாக சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

முஸ்லிம் மக்களின் இந்த கோரிக்கையை அரசாங்கம் எதிர்க்கவில்லை என சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டிருந்தார்.