வரவு செலவுத்திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க முடியாத நிலையிலேயே இந்த அரசாங்கம் உள்ளது – கபீர் ஹாஸீம் தெரிவிப்பு

Report Print Kamel Kamel in அரசியல்
59Shares

இந்த அரசாங்கம் வரவு செலவுத் திட்டம் ஒன்றைச் சமர்ப்பிக்க முடியாத நிலையில் உள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஸீம் தெரிவித்துள்ளார்.

நிதி ஒதுக்கீட்டுச்சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தோல்வியடைந்துள்ளார். இதனை நான் கூறவில்லை மக்கள் கூறுகின்றார்கள். இதனை கொரோனா சால்வையைக் கொண்டு மறைக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

மேலும் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் ஆட்சியை ஏற்றுக் கொண்டு ஓராண்டு கடக்கும் நிலையிலும் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்காமலிருந்ததில்லை.

எனினும் இந்த அரசாங்கத்தினால் வரவு செலவுத்திட்டமொன்றை சமர்ப்பிக்கக்கூடிய இயலுமை அற்ற நிலையை அவதானிக்க முடிகின்றது.

அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தைச் சமர்ப்பித்த விதம் பிழையானது எனவும் செலவு செய்து விட்டு அரசாங்கம் அனுமதி கோருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த அரசாங்கம் ஓராண்டு ஆட்சியை முன்னெடுத்த போதிலும் நாட்டுக்கும் மக்களும் எதுவும் செய்யவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஸீம் தெரிவித்துள்ளார்.