1,000 ரூபாவிற்காக 5 வருடங்களாக பேசுகின்றோம்! வடிவேல் சுரேஷ்

Report Print Banu in அரசியல்

1,000 ரூபாய் சம்பளத்திற்காக 5 வருடங்களாக பேசிவருவது வெட்கக் கேடானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

ஐந்து வருடங்களாக ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்காக போராடி வருகின்றனர். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்கம் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுத்தரத் தவறியதாலே, மலையக மக்களின் தோட்டத்தொழிலாளர்களின் சாபக்கேட்டின் காரணமாக இந்த நாடாளுமன்றத்தில் இடம்பெறத் தவறிவிட்டனர் என்று கூறியுள்ளார்.