வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்கள் புறக்கணிப்பு : திகாம்பரம் எம்.பி வலியுறுத்தல்

Report Print Banu in அரசியல்

2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

அத்தியாவசிய பொருட்களின் விலைக்குறைப்பை நாம் பல முறை வலியுறுத்தியும் அதனை அரசாங்கம் செய்யவில்லை.

கடந்த காலங்களில் அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களுக்கு விலைக்குறைப்பை செய்திருந்தது. அதிலும் மலையக மக்களுக்காக இவ்வரவு செலவுத்திட்டத்தில் எதுவும் செய்யப்படவில்லை எனக்கூறியுள்ளார்.