தொழிலாளர்களுக்கு நிச்சயம் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும்: சாமர சம்பத்

Report Print Rakesh in அரசியல்
28Shares

தமிழ் முற்போக்குக் கூட்டணியினருக்குத்தான் முதலாளிமார் சம்மேளனத்துடன் 'டீல்' இருக்கின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிச்சயம் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

"பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கும் யோசனை வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வேலுகுமார், இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள் விமர்சிக்கின்றனர். நல்லாட்சியின்போது அவர்களால் ஏன் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாமல்போனது?

அன்று ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் பெற்றோல் கேனுடன் கூடச் சபைக்கு வந்தார். ஆனால், இனி பெற்றோல் கொண்டுவர வேண்டியதில்லை.

முதலாளிமார் சம்மேளனத்தின் இணக்கம் தேவையில்லை. நாம் சம்பள உயர்வை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். தமிழ் முற்போக்குக் கூட்டணியினருக்குதான் முதலாளிமார்களுடன் 'டீல்' உள்ளது" - என்றார்.