மக்கள் நிவாரணங்களை கோருவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போது கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மக்கள் நிவாரண உதவிகளை கோரி விகாரையை சுற்றி வரிசையில் நிற்கும் விதத்தை நாராஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர், காணொளி ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளார். அந்த காணொளியை பார்க்குமாறு ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வரும் கடுமையான அர்ப்பணிப்புகளை செய்த ஆனந்த தேரரிடம் அரசாங்கம் மண்டியிட்டு மன்னிப்பு கோர வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.