சம்பாதித்த விதத்தை வெளியிட முடியாத எந்த பணமாக இருந்தாலும் அவற்றை நாட்டுக்கு கொண்டு வருமாறும், அது குறித்து அரசாங்கம் எவ்வித கேள்விகளையும் எழுப்பாது எனவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சத்தியக் கடிதத்தை வழங்கி, ஒரு லட்சம் ரூபாயை செலுத்திய பின்னர், சம்பாதித்த விதத்தை வெளியிட முடியாத உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் இருக்கும் பணத்தை நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைளுக்காக பயன்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் எவ்வித கேள்விகளையும் எழுப்பாது.
இதனை பிரதான நோக்கமாக கொண்டே முதலீட்டு ஊக்குவிப்பு வரி விடுவிப்பு பொதியை அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வழங்கியுள்ளது. இதன் காரணமாக தேசிய வருமான வரி திணைக்களத்திடம் வெளிக்காட்டாத பணத்தை அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்ய தனியார் துறையினர் முன் வருவார்கள் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.