நாடாளுமன்ற அமர்வுகளில் மூன்று ஜனாதிபதிகள் பிரசன்னம்..

Report Print Kamel Kamel in அரசியல்
117Shares

நாடாளுமன்ற அமர்வுகளில் முதல் தடவையாக மூன்று ஜனாதிபதிகள் பிரசன்னமாகியிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக இவ்வாறு மூன்று ஜனாதிபதிகள் சபை அமர்வுகளில் பங்கேற்றிருந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் நேற்றைய தினம் நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.