20வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க தலா 8 கோடி ரூபாய் கோரிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்
230Shares

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க தலா 8 கோடி ரூபாய் பணத்தை கோரிய ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவரும் ஊவா மற்றும் சபரகமுவை மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த மாகாணங்களுக்கு அருகில் உள்ள இரண்டு மாவட்டங்களில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

தமது மாவட்டங்களின் அரசியல் விடயங்களை அடிப்படையாக கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோதலில் ஈடுபட்டு வருவதாக அறிந்துக்கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் சிலர், 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரியுள்ளனர்.

ஆதரவளித்தால் தமக்கு என்ன கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் வினவியுள்ளனர்.

என்ன தேவைப்படுகிறது என பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது தமக்கு தலா 8 கோடி ரூபாய் பணம் தேவை என அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இது சம்பந்தமாக இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள், இந்த கோரிக்கை குறித்து கட்சியின் உயர் மட்டத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க இவர்கள் கோரும் பணம் மிக அதிகம் என்பதால், அவர்களின் ஆதரவு தேவையில்லை என கட்சியின் உயர் மட்டம் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.