நாடாளுமன்றத்திற்கு தெரிவான கல்விமான்கள் குறித்து வருத்தப்படும் பொன்சேகா

Report Print Steephen Steephen in அரசியல்
230Shares

கல்விமான்கள் சிலர் நாடாளுமன்றத்திற்கு தெரிவான போது மகிழ்ச்சியாக இருந்தாலும் தற்போது அவர்கள் குறித்து வருத்தத்துடன் பேச வேண்டியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியில் பின் வரிசையில் அமர்ந்துள்ள கல்விமான்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்ற மூன்று நிமிடங்களே கிடைக்கின்றது. முன்வரிசையில் இருக்கும் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியாதவர்களுக்கு 40 நிமிடங்கள் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது மிகவும் பரிதாபத்திற்குரிய நிலைமை.

நீதியமைச்சர் அலி சப்ரி மீது எனக்கு மரியாதை இருந்தது. அவர் தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதால் தனது நற்பெயரையும் அழித்துக்கொண்டுள்ளார் எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.