முன்னாள் போராளிகளையும், தமிழ் தேசத்தையும் மறந்த வரவுசெலவுத் திட்டம் - செல்வராசா கஜேந்திரன்

Report Print Banu in அரசியல்

2021ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் முன்னாள் போராளிகளையும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் மறந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இரண்டாவது தடவையாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் சிங்கள தேசத்தையும், யுத்ததால் பாதிக்கப்பட்ட வடக்கையும் அபிவிருத்தியில் சமப்படுத்தவில்லை என கூறியுள்ளார்.