உலகில் எந்த நாட்டில் சிறையில் இருப்பவர்கள் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன், மட்டக்களப்பில் வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் திறப்பு விழாக்களில் கலந்துக்கொள்வது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
இப்படி வேலை செய்து அரசாங்கம் நாட்டின் எதிர்கால சந்ததிக்கு என்ன முன்னுதாரணத்தை வழங்க போகின்றது எனவும் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.