இந்த நாட்டில் பிறக்கும் குழந்தையொன்று சுமார் ஏழு லட்சம் ரூபா கடனாளியாகவே பிறக்கின்றது என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
1994ம் ஆண்டு முதல் இன்று வரையில் இந்த நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்தவர்கள்.
காலத்திற்கு காலம் ஐக்கிய தேசியக் கட்சி பிரதமர் பதவியை வகித்த போதிலும், நிறைவேற்று ஜனாதிபதியாக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களே பதவி வகித்து வந்தனர்.
2015ம் ஆண்டிலும் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும் பதவி வகித்தனர்.
அவ்வாறு என்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவிற்கு யார் பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
1994ம் ஆண்டு முதல் இதுவரையில் நாடு பதினான்கரை ட்ரில்லியன் ரூபா கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், பிறக்கும் குழந்தையொன்று ஏழு லட்சத்து பதின்மூன்றாயிரம் ரூபா கடனாளியாகவே பிறக்கின்றது.
அபிவிருத்தி அடைந்து வரும் இலங்கை ஊழல் மிகுந்த நாடுகளின் தர வரிசையில் நான்காம் இடத்தை வகித்து வருவதாகவும் இதுவே இந்த ஜனாதிபதிகளின் செயற்பாடாகும் என அவர் தெரிவித்துள்ளார்.