ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமின் மனைவிக்கு ஐந்து மில்லியன் ரூபா வழங்கியதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் தம்மை பற்றி பொய்யானதும், போலியானதுமான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற கடித தலைப்புடன் கூடிய அறிக்கையில் அவர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தாம் சஹ்ரானின் மனைவிக்கு பெருந்தொகை பணம் வழங்கியதாக ஒப்புக்கொண்டதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை.
தாம் குறித்த பெண்ணை சந்தித்ததே கிடையாது எனவும், பணம் வழங்கியதில்லை எனவும், இந்த விடயம் குறித்து ஒப்புதல் வாக்குமூலமொன்றை வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதி மற்றும் சட்டம் ஒழுங்கிற்காக தாம் முன்னெடுத்து வரும் போராட்டங்களை மலினப்படுத்தும் நோக்கில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.