பிரதமரின் பிறந்த நாளுக்கு கிடைத்த விசேடமான பரிசு

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் மகிந்த ராஜபக்ச கடந்த 18ஆம் திகதி தனது 75ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியிருந்தார்.

இந்த நிலையில் பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு விசேடமான பரிசு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி முன்னாள் ஜனாதிபதியான பிரதமர் மகிந்த ராஜபக்ச, முதலில் பயன்படுத்திய வாகனத்தை அவரிடம் இருந்து கொள்வனவு செய்த குடும்பத்தினர் அந்த வாகனத்தை மீண்டும் பிரதமரின் கையளித்துள்ளனர்.

பிரதமரின் பிறந்த தின பரிசாக அவர்கள் அதனை கையளித்துள்ளனர்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச சட்டத்தரணி என்பதுடன் சட்டத் தொழில் மூலம் கிடைத்த வருமானத்தில் இந்த வாகனத்தை கொள்வனவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.