நாடாளுமன்றத்தில் முதலிடத்தை பெற்ற எதிர்க்கட்சித் தலைவர்

Report Print Steephen Steephen in அரசியல்
890Shares

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தரவுகளை சேகரித்து ஆய்வு செய்யும் Manthri.lk இணையத்தளத்திற்கு அமைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 2020 ஒக்டோபரில் மிகவும் செயற்பாட்டு ரீதியான நாடாளுமன்ற உறுப்பினராக தரப்படுத்தப்பட்டுள்ளார்.

அனுரகுமார திசாநாயக்க இரண்டாம் இடத்திலும், மஹிந்தானந்த அளுத்கமகே மூன்றாம் இடத்திலும், ஹர்ஷ டி சில்வா நான்காவது இடத்திலும், மொஹமட் அலி சப்ரி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த தரப்படுத்தல் 2020 ஒக்டோபர் 6 முதல் 23 வரை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டங்களில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய பங்களிப்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.