வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

Report Print Kamel Kamel in அரசியல்
50Shares

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 151 பேர் வாக்களித்துள்ளதுடன், எதிராக 52 பேர் வாக்களித்துள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி பிரதமரும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்சவினால் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து தொடர்ச்சியாக பலரும் வரவு செலவுத் திட்டம் தொடர்பாக தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.