பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நிச்சயம் கிடைக்கும்! அரசு உறுதி

Report Print Rakesh in அரசியல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஜனவரி மாதம் முதல் நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

"பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை விமர்சிக்காது, பெற்றுக்கொடுப்பதற்கு எதிரணி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஆயிரம் ரூபா தொடர்பில் அமரர். ஆறுமுகன் தொண்டமான் பல சுற்றுப் பேச்சுகளை நடத்தியிருந்தார். நிச்சயம் அதனைப் பெற்றுக்கொடுப்போம்" - என்றார்.