ஜே.வி.பிக்கு உள்ள உரிமை எமக்கு இல்லையா..? கேள்வியெழுப்பும் செல்வம் அடைக்கலநாதன்

Report Print Banu in அரசியல்
76Shares

ஜே.வி.பி கட்சியினர் போராட்ட இயக்கமாக இருந்து ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் அவர்களது போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூறுகின்றனர்.

எனினும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஐக்கிய இலங்கைக்குள்ளே ஒரு தீர்வை எதிர்பார்க்கின்றோம். அதன் பிரகாரம் வாழ்வதற்கான முயற்சியை நாங்கள் மேற்கொள்கின்றோம். ஆனால் அடக்கு முறைகளால் தொடர்ந்து அடக்கப்படுகின்றபோது அதனை உடைத்தெறிவதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் தவிர்க்க முடியாது.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அதில் உயிரிழந்தவர்களை நினைவுகூறுவது தடைப்படும் அவலநிலை நாட்டில் காணப்படுகிறது.

ஜே.வி.பியை எடுத்துப்பாருங்கள், அவர்கள் போராட்ட இயக்கமாக இருந்தார்கள். ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.