வாழ வேண்டியவர்களை கொன்றுவிட்டு மயானங்களை துப்பரவு செய்கின்றனர்:டக்ளஸ் தேவானந்தா

Report Print Banu in அரசியல்

எமது மக்களுக்காக கதைப்பதாக கூறிக்கொண்டு மக்களை இனவாதிகளாக சில அரசியல்வாதிகள் காண்பித்து கல்லறை அரசியலை மேற்கொண்டு வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

போலித் தமிழ் தேசியம் என்று கூறி யுத்தத்தில் இறந்தவர்களை வைத்து சிலர் கல்லறை அரசியலை சில்லறைத்தனமாக செய்து வருகின்றனர்.

மயானங்களை துப்பரவு செய்யும் இவர்கள் மக்களின் துயரத்தை துப்பரவு செய்வதில்லை.வாழ வேண்டிய எம் மக்களை கல்லறைகளாக்கி விட்டு, வாழுகின்ற மக்களுக்கு இவர்கள் துரோகிகளாகிவிட்டனர் என்று கூறியுள்ளார்.