ஆபத்தான நிலையினை நோக்கி நகரும் தமிழ் சமூகம்! மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்

Report Print Kumar in அரசியல்

ஆபத்தான நிலையினை நோக்கி தமிழ் சமூகம் நகர்ந்துகொண்டிருப்பதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படும் நிலையில் அரசாங்கத்தின் சார்பில் தெரிவானவர்கள் மௌனம் சாதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மீனவர் தினம் இன்றாகும்.உலகின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தினை வகிக்கும் மீனவர்களை கௌரவப்படுத்தும் வகையில் சர்வதேச மீனவர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக மீன்பிடி துறை காணப்படுகின்ற நிலையில் மீனவர்களை கௌரவப்படுத்தும் வகையிலான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

சர்வதேச மீனவர் தினத்தினை முன்னிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் சர்வதேச மீனவர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சசிகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிகவும் குறைந்தளவிலான பங்குபற்றுதலுடன் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது சூம் தொழில்நுட்பம் ஊடாக பல பாகங்களிலும் இருந்து தொடர்புகொண்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் தங்களது கருத்துகளை முன்வைத்துள்ளனர்.