ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட காவல்துறைமா அதிபர் தொடர்பில் ஆராய்வு

Report Print Ajith Ajith in அரசியல்
60Shares

நாடாளுமன்ற பேரவை அடுத்த வாரம் கூடும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பரிந்துரைக்கப்பட்ட காவல்துறைமா அதிபர் தொடர்பில் ஆராயும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து முன்னாள் காவல்துறை அதிபர் பூஜித் ஜெயசுந்தர நீக்கப்பட்ட பின்னர் சி. டி. விக்ரமரத்ன தற்போது செயல் காவல்துறை அதிபராக செயற்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நாடாளுமன்றம் நவம்பர் 23 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத்தில் கூடவுள்ளது.

இதன்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள நீதியசர்களுக்கான பதவி வெற்றிடங்கள் மற்றும் காவல்துறை அதிபரின் வெற்றிடங்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த பரிந்துரைகள் என்பன பரிசீலிக்கப்படவுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் ஆகியோர் நாடாளுமன்ற பேரவையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

நாடாளுமன்ற பொதுச்செயலாளரான தம்மிகா தசநாயக்க நாடாளுமன்ற பேரவையின் செயலாளராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.