மாவீரர் நினைவேந்தலுக்கு இடமில்லை: நாடாளுமன்றில் ஆளுங்கட்சி திட்டவட்டம்

Report Print Rakesh in அரசியல்

கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக இருக்கும்வரை, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது என ஆளுங்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சில தமிழ் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயகக் கோட்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றார்கள்.

உயிரிழந்த விடுதலைப் புலிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் பற்றியும் நாடாளுமன்றத்தில் கதைக்கின்றார்கள்.

நாட்டில் தற்போது முதுகெலும்புள்ள அரசியல் தலைவர்களே ஆட்சியில் இருக்கின்றார்கள்.

எனவே, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் வரை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு இடமளிக்கப்படாது என தெரிவித்துள்ளார்.