ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் நாளை தீர்மானம்

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படும் என்று கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் எந்த ஆசனங்களையும் கைப்பற்றாத ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒரேயொரு தேசிய பட்டியல் கிடைத்தது.

எனினும் இந்த தேசியப்பட்டியலுக்கு யாரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்வது என்ற குழப்பம் கடந்த 105 நாட்களாக நீடித்து வருகின்றது.

முன்னதாக இந்த ஆசனத்தைக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டபோதும் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அது நிறுத்தப்பட்டது.

அதேநேரம் கட்சியின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் இந்த தேசிய பட்டியல் ஆசனம் தமக்குத் தரப்படவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க பகிரங்கமாகவே கோரி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.